இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய, அவர்களிடையே வாசிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. அவ்வகையில் மாவட்ட நிருவாகம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களிடையேயும் புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, அங்கிருந்தும் மாணவர்கள் புத்தகத் திருவிழாவைக் காண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், பெண்கல்வி பற்றியும், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைச் சார்ந்து, கல்லூரி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும், கல்லூரியிலும் கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், விவாத மேடை, பட்டிமன்றம் போன்ற போட்டிகளை நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக