வரும் 7ம் தேதி இளலிகத்தில் நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

வரும் 7ம் தேதி இளலிகத்தில் நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்


நமது தருமபுரி மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் 07.08.2024 (புதன் கிழமை) அன்றுகாலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை,  எஸ்.ஏ.5 இலளிகம் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகம், இலளிகம் பகுதியில் நடைபெறுகிறது.  

மேற்கண்ட மருத்துவ முகாமில் இருதய நோய் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த அழுத்தம் போன்ற பொது மருத்துவ பரிசோதனை மற்றும் பொது சுகாதாரம், மகளிர் சுகாதாரம் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் நெசவாளர்கள் / நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் நெசவாளர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.


இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad