ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம்! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம்!


ஒன்றிய அரசின் மக்கள் விரோத தமிழக விரோத பட்ஜெட்டைக் கண்டித்து பென்னாகரம் இந்தியன் வங்கி முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.கோபால் ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 


தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மோடி அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு உரம், விதை ஆகியவற்றுக்கு மானியத்தை கங்கு ஐந்து, நூறுநாள் வேலைத்திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது, தமிழ்நாடு அரசுக்கு மெட்ரோ ரயில் திட்டம், வெள்ளநிவானணம் உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்காததைக்கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். 


சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ரவி, ஆர்.சின்னசாமி, எஸ்.செல்லன், எம்.சிவா, ஒன்றிய செயலாளர்கள் ஜி.சக்திவேல், என்.பி.முருகன், நகர செயலாளர் ஆர்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர்கள்  கே.அன்பு, எம்.குமார், டி.ஆர்.சின்னசாமி,  சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜி.மாதையன்,  விடுதலை விரும்பி, கே.புள்ளாரு, வட்டார செயலாளர்கள் விஸ்வநாதன், பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதிகா அன்பரசு, சக்கரவேல், மாதம்மாள் மாணிக்கம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் லட்சுமி தங்கராஜ், கமலா முனுசாமி உள்ளிட்ட 160  பேர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad