தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், வாகன விபத்துக்களை தடுக்கும். பொருட்டு வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளி ஆகிய சாலைகளை விரிவாக்கம் செய்தல், சந்திப்பை மேம்படுத்துதல், சாலை வளைவுகளை நேர்படுத்துதல், ஒளி பிரதிப்பான்கள் அமைத்தல், வெள்ளை பூசுதல் உள்ளிட்ட பணிகள் சாலை பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் நடைப்பெற்று வருகின்றன. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்..
இந்த ஆய்வின் போது சாலை அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், சாலையின் தரத்தை உறுதி குறித்து ஆய்வு செய்தவர், சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சாலையோரங்களில் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டு நன்றாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் நாகராஜீ, உதவிக் கோட்டப் பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவிப் பொறியாளர் ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக