தருமபுரி மாவட்டம் அரூர் நகரச் செயலாளர் தீப்பொறி செல்வம் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதனை வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு மாவட்ட செயலாளர் வினோத்குமார் வரவேற்று பேசினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை நிலைய செயலாளர் மாவட்ட செயலாளருமான டி கே ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர் ஆர் முருகன், ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மின் கட்டண உயர்வு சொத்து வரி, குடிநீர் (ம) கழிவுநீர் கட்டண உயர்வு மற்றும் பால் (ம) பால் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன உரையாற்றினர்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட பொருளாளர் மணிமேகலன், பாலு உள்ளிடோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் கண்ணதாசன், அறிவழகன், வடமலை, நகர மன்ற செயலாளர் ராஜேந்திரன், பொ.குஉறுப்பினர் சகாதேவன்,அ.சாரா ஓ.அணி மாது, மாஇ.பெ.பா.செ சுமதி, அஸ்வத் நாரயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தங்கமணி மொரப்பூர் முருகேசன் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக