நிகழ்ச்சிக்கு அரிமா சங்க நிர்வாகிகள் முத்து, கோவிந்தசாமி, பச்சியப்பன், நாகராஜ், சீனிவாசன், பாலாஜி, சக்திவேல், ராமசாமி, ராஜாமணி, கிரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அரிமா சரவணன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் கண்புரை, கண் நீர் அழுத்தநோய், குழந்தைகளின் கண் நோய், மாலைக்கண் நோய், தூரப் பார்வை, கிட்ட பார்வை, கண்களில் தானாக நீர் வடிதல், மாறுகண் , உள்விழிலென்சு உள்ளிட்ட கண் சம்மந்தமான நோய்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்தனர்.
இம்முகாமில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 600 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 230 கண்புரை நோயாளிகளின் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இம்முகாமில் அரிமா சங்கத்தினர், மத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக