மொரப்பூர் அருகே கணவனை பிரிந்த இளம் பெண் மர்ம சாவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

மொரப்பூர் அருகே கணவனை பிரிந்த இளம் பெண் மர்ம சாவு.


மொரப்பூர் அருகே கணவரை பிரிந்த இளம் பெண் மர்மமாக இறந்துள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் இவரது மனைவி லலிதா (32) கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இதனால் கணவரை விட்டு பிரிந்த லலிதா தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார், இவர் பணி செய்யும் போது  காயம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்துள்ளார், அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டில் லலிதா வாய் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், இது குறித்த தகவல் அறிந்து வந்த மொரப்பூர் போலீசார் லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்கு பதிவு செய்து  போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad