தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலைய வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதங்கள் ஏற்படுகிறது, நேற்று இரவு தவிடு மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் பிக்கப் வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.
அந்த இடத்தை சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன்ராஜசேகர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் அரூர் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர் இந்த ஆய்விற்கு பின்பு தொடர் விபத்தை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பேரிகாட் அமைக்க வேண்டும் என எம்எல்ஏ கேட்டு கொண்டார் காவல்துறை சார்பில் பேரிகாட் அமைக்கப்படும் என தெரிவித்தனர் பின்னர்
பேருந்து நிலைய வளைவில் நிரந்தரமாக வேகத்தடை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நடராஜன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக எம்எல்ஏ வே.சம்பத்குமார் கேட்டுகொண்டார் .
உதவி பொறியாளர் இனியவன் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு பேரூராட்சி உறுப்பினர்கள் கலைவாணன் பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக