தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பல்லேனஅள்ளி கிராமத்தில் கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆகஸ்ட்.1, வியாழக்கிழமை இன்று மதியம் 3 மணிக்கு நடைப்பெற்றது.
கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் கடந்த 30ம் தேதி திடிர் நிலசரிவு ஏற்பட்டு சுமார் 400 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காரிமங்கலம் அடுத்த பல்லேனஅள்ளி புதூர் ஏரியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் 200க்கும் மேற்பட்ட பெண்கள், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய மெளன அஞ்சலி செலுத்தினர். மேலும் மருத்துவ மணையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக