தர்மபுரி மாவட்டம் தென்கரை கோட்டையில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்தில் பிசி பட்டியலில் இருக்கும் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கூறி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ஆம் தேதியை கருப்பு தினமாக தலித் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.
தென்கரைக்கோட்டை பாத்திமா அன்னை ஆலயத்தின் வளாகத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் தலைமையில் கிறிஸ்தவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோஷமிட்டனர், பின்பு ஆலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் அன்வர், தர்மபுரி மறை மாவட்ட எஸ்சி, எஸ்டி கமிஷன் செயலாளர் பாதர் மோசஸ், இணை செயலாளர் எம்எப்.ரமேஷ் மற்றும் 30க்கும் மேற்பட்ட பங்கு தந்தையர்கள் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக