சி.எம்.புதுர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

சி.எம்.புதுர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம்  சி.எம்.புதுர் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிக்கமாரண்டஅள்ளி, குட்லானஅள்ளி, கொரவாண்டஅள்ளி, சிக்கதோரணபெட்டம், எம்.செட்டி அள்ளி, சாமனூர், கொலசனஅள்ளி ஆகிய 7 ஊராட்சிகளை  சேர்ந்த பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்  ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நாகராஜன் தலைமையில் நடைப்பெற்றது. இம்முகாமிற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேனுகா  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இம்முகாமில் .அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு. முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடுதிட்டம், சமுகநலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புதிட்டம், வேளாண்மைத்துறை மூலம் மானியவிலையில் விவசாயிகளுக்கு  இடுபொருட்கள், இ.சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளிட்ட  தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். இம்முகாமில் இலவசமின்சாரம், பட்டாபெயர் மாற்றம், இலவசவீட்டுமனைபட்டா, முதியோர் உதவிதொகை, மகளிர் உரிமைத்தொகை குடும்பஅட்டை உள்ளிட்டவை வேண்டி பொது மக்கள் மனு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு திமுக மேற்குஒன்றிய செயலாளர் பி.கே.அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதிமணிபாண்டுராஜ், ராணிதிம்மராஜ், சரோஜாசுந்தரேசன், உமாதுரை, சுரேஷ், அம்பிகாபாக்கியராஜ், சின்னமுத்துபட்டாபி, துணைத் தலைவர்கள் , ஊராட்சி செயலாளர்கள், வார்டுஉறுப்பிணர்கள் மற்றும் அனைத்து அரசு துறையை சார்ந்த  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad