நாகாவதி அணை பகுதிக்கு அரசு பேருந்து நேரத்தை மாற்றி அமைக்க வேண்டி போக்குவரத்து அதிகாரியிடம் மாணவ மாணவிகள் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

நாகாவதி அணை பகுதிக்கு அரசு பேருந்து நேரத்தை மாற்றி அமைக்க வேண்டி போக்குவரத்து அதிகாரியிடம் மாணவ மாணவிகள் மனு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகாவதி அணைப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் சின்னம்பள்ளி அரசு மாதிரி பள்ளி , அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகாவதி அன்னையிலிருந்து அரகாசனா அள்ளி, எரப்பட்டி ,ஆர் ஆர் அள்ளி, காளி நாயக்கனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். 


இந்த நிலையில் அந்த வழியாக ஒரே ஒரு அரசு நகரப் பேருந்து வருவதாக அப்பகுதி   மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் குற்றம் சாட்டை வருகின்றனர். இதே போல பள்ளி நேரத்திற்கு  வராமல் காலை 6 மணிக்கு  பேருந்து வருவதாகவும் மற்றும் மாலை 7 மணிக்கு பேருந்து வருவதாகவும் பள்ளி மாணவ மாணவிகள் கூறுகின்றனர். 


இதனால் உரிய நேரத்திற்கு வீட்டிற்கும் பள்ளிக்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பென்னாகரம் அரசு பேருந்து பணிமனை கிளை மேலாளரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.  


எனவே எங்களுக்கு பள்ளி செல்லும் நேரத்திற்கு தகுந்தவாறு பேருந்தை நேரத்தை மாற்றி இயக்க வேண்டும் என  புகார் மனு அழைத்துள்ளனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் பேருந்தை எங்கள் ஊரிலேயே சிறை பிடிப்போம் என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad