தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலில் புகழ்பெற்ற தேசநாதீஸ்வர சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என நம்பப்படுகிறது. மேலும் காவிரி அம்மனுக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கை விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பின்னர் காவிரி அம்மன் தேர் பவனியாக கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்டு பேருந்து நிலையம் வழியாக நாகர்கோவில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் எடுத்து வந்து தீர்த்தவாரி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக