சரக அளவில் நடைபெற்ற மேசைப்பந்து போட்டியில் U- 14 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கெளதம் முதலிடமும், இரட்டையர் பிரிவில் கெளதம் மற்றும் சேகுவரன் இரண்டாமிடமும், U- 17 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கெவின் இரண்டாமிடமும், இரட்டையர் பிரிவில் கெவின் மற்றும் இஜாஸ் முதலிடமும் பிடித்து வெற்றிபெற்றுள்ளனர். U- 19 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராம்கிஷோர் முதலிடமும், இரட்டையர் பிரிவில் ராம்கிஷோர் மற்றும் ராகவா முதலிடமும் பிடித்து வெற்றிபெற்றுள்ளனர்.
பெண்களுக்கான U- 14 ஒற்றையர் பிரிவில் மிஸ்பா முதலிடமும், இரட்டையர் பிரிவில் மிஸ்பா மற்றும் சுபத்ராஸ்ரீ முதலிடமும், U- 17 பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித்ரா முதலிடமும், இரட்டையர் பிரிவில் சுமித்ரா மற்றும் அட்ஷயா முதலிடமும், U- 19 பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழ்மதி முதலிடமும், இரட்டையர் பிரிவில் தமிழ்மதி மற்றும் வர்ஷா முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் R. சத்யராஜ், M. ஆனந்தகுமார் மற்றும் திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளர் திரு.V. முருகேசன் அவர்கள், செயலாளர் திரு.M. பிருஆனந்த்பிரகாஷ் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாவட்டஅளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக