இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய தொழில் முனைவோருக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசுடன் இணைந்து, இந்தியன் வங்கி சார்பில் பன்னிரண்டு ஆண்டுகளாக  சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. 


இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அனுபவமும் திறமையும் வாய்ந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சியோடு தொழிலுக்கான வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு, சந்தை ஆய்வு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பயனுள்ள வாழ்வியல் திறன்களை வழங்குகிறோம். இத்துடன் காணொளி காட்சி மூலம் (LCD Projector) செயல்முறை விளக்கங்களும், இந்நிறுவனத்தின் மூலமாக பயிற்சி பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய தொழில் முறைகளை பற்றியும், தொழில் அனுபவங்களை பற்றியும் கருத்துக்கள் பகிரப்படுகிறது. மதியஉணவு மற்றும் தேநீர் பயிற்சி நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்துடன் தொழில் துவங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற இலவச சேவைகளும் வழங்குகிறோம்.


தற்போது  விரைவு உணவுகள் தயாரித்தல் (சிறுதானியங்கள்)        பயிற்சி -10 நாட்கள் துவங்க உள்ளோம். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2024. வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


இந்த  பத்து நாட்கள்  பயிற்சியில்   சேர ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, பெற விரும்பும்    பயிற்சி,ஆதார் அட்டை நகல், மாற்றுச் சான்றிதழ்(TC), புகைப்படம்(Passport Size)-3 மற்றும் தொலைபேசி (அ) கைபேசி எண்ணுடன் மேற்கண்ட தேதிக்குள் நேரிலோ (அ) அஞ்சல் அட்டை மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், கலெக்டர் அலுவலக வளாகம், தருமபுரி 04342-230511, 8667679474, 9442274912 என்ற அலைபேசி எண்ணில்  தொடர்பு  கொண்டு பயன் பெறலாம் என தருமபுரி இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad