பாலக்கோடு மேல் தெரு மகா சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஆகஸ்ட், 2024

பாலக்கோடு மேல் தெரு மகா சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவில்  எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு மகாசக்தி  மாரியம்மன் கோயில்  திருவிழா கடந்த 5ம் தேதி திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன்  துவங்கியது.


செவ்வாய்க்கிழமை நேற்று ஊர் மக்கள் மேல்தெருவில் உள்ள அனைத்து தெருக்களுக்கும்  கூழ்சட்டி தலையில் சுமந்து சென்று அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி  நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து திருவிழாவின்  முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு  சிறப்பு அலங்காரத்தில் மகாசக்தி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பக்தர்கள்  கங்கா பூஜை செய்தும், பொங்கல் வைத்தும், கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும்  தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து  இன்று மாலை 5 மணிக்கு பக்தர்கள்  கரகம் எடுத்தும்  மாவிளக்கு எடுத்தும், அம்மன் வேடம்  அணிந்து மேல் தெரு பகுதியில் உள்ள அனைத்து வீதி வழியாக சென்று அம்மனை வழிபட்டனர். நாளை 8ம் தேதி வியாழக்கிழமை மாலை வானவேடிக்கை, நையாண்டி, பம்பை, மேளதாளங்களுடன்  அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவருக்கும்   அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. 


இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள்  மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad