வயநாடு மக்களுடன் மை தருமபுரி தன்னார்வலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

வயநாடு மக்களுடன் மை தருமபுரி தன்னார்வலர்கள்.


கேரளா வையநாடு மண்சரிவால் பாதித்த மக்களுக்கு உதவிய மை தருமபுரி அமைப்பினர், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் திரு. சதீஷ்குமார் கூறுகையில்:- மை தருமபுரி அமைப்பின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு  மனிதநேயமிக்க சேவைகளை செய்து வருகிறோம். இயற்கை சீற்றங்களால் மற்றும் பேரிடர் காலங்களில் பாதித்த பல பகுதிகளுக்கும் உதவி வருகிறோம். சென்னை, கேரளா இடுக்கி மாவட்டம், தூத்துக்குடி, வேதாரண்யம் தொடர்ந்து தற்போது வையநாடு மண்சரிவு பாதித்த மக்களுக்கு உதவியாக மை தருமபுரி அமைப்பின் மூலம் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவி பொருட்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் பொருட்களை வையநாடு நோக்கி எடுத்து வந்தோம். 


வையநாடு மாவட்டத்தில் உள்ள முட்டில் பஞ்சாயத்து, மணந்தவாடி நகராட்சி ஆகிய இடங்களில் உள்ள மூன்று முகாம்களுக்கும் நேரில் சென்று நானூறு குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவி பொருட்களை வழங்கினோம். அதைத் தொடர்ந்து வையநாடு ஆட்சியர் அலுவலகம் நிவாரண உதவி மையத்தில் அனைத்து பொருட்களையும் சார் ஆட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் நிவாரண பொருட்களை வழங்கினோம். வையநாடு தாசில்தார் சிவநாதன் அவர்கள் தருமபுரியில் இருந்து வையநாடு வரை எந்த வழியில் வரவேண்டும் என்று நமக்கு தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தார். 


நமக்கு உதவியாக அமீரகத்தில் இருந்து ஹோப் கௌசர் பேக், டோக்கியோ தமிழ்ச்சங்கம் ஆகியோர் எங்களுடன் வந்திருந்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம், சண்முகம், முஹம்மத் ஜாபர், விஜயகாந்த், சபரி முத்து, ஓட்டுநர் முருகன் ஆகியோர் நிவாரண பொருட்களை பத்திரமாக கொண்டு சேர்த்தோம் என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad