தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி மற்றும் பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிகரலஅள்ளி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் இன்று (08.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிகளின் பொது நிதியிலிருந்து ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து ஓடுதளத்திற்கான தார் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைதொடர்ந்து, பென்னாகரம் வட்டம், சிகரலஅள்ளி, இருளர் கொட்டாய் காலனியில் PM JANMAN திட்டத்தின் கீழ், 28 பயனாளிகளுக்கு தலா ரூ.5.70 இலட்சம் வீதம் ரூபாய் 1 கோடியே 59 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் 28 வீடுகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சிகரலஅள்ளி இருளர் கொட்டாய் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு குறித்தும், குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேசன், வட்டாட்சியர்கள் திருமதி.லட்சுமி, திரு.ஆறுமுகம், செயல் அலுவலர் திரு.செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக