சோமனஅள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

சோமனஅள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம்  சோமனஅள்ளி சமுதாய கூடத்தில் பி.கொல்ல அள்ளி, மோதுகுலஅள்ளி, கம்மாளப்பட்டி, காட்டம்பட்டி ஆகிய ஊராட்சிகளை  சேர்ந்த பொது மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேனுகா  ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.


இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் குட்டி (எ ) முனிராஜ், கோவிந்தசாமி, திலகவதிநடராஜன், சங்கோதிசத்யபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் .அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு. முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடு திட்டம், சமுக நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம், வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் விவசாய இடுபொருட்கள், இ.சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளிட்ட  தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.


இம்முகாமில் இலவச மின்சாரம், பட்டா பெயர் மாற்றம், இலவசவீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமைத்தொகை குடும்பஅட்டை உள்ளிட்டவை வேண்டி பொது மக்கள் மனு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் அஸ்வின் குமார், வி.ஏ.ஓ சிவசங்கர், வார்டுஉறுப்பிணர்கள் மற்றும் அனைத்து அரசு துறையை சார்ந்த  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad