பஞ்சப்பள்ளி அருகே ஒட்டர்தின்னை கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

பஞ்சப்பள்ளி அருகே ஒட்டர்தின்னை கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு.


தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த ஒட்டர் தின்னை கிராமத்தில் 190 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள்  வசித்து  வருகின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று பஞ்சப்பள்ளி நியாய விலைக்கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். நீண்ட தூரம் சென்று வர சிரமமாக உள்ளதாகவும், இக்கிராமத்திலேயே புதிய நியாய விலைக்கடை திறக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவாகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.


இவர்களின் கோரிக்கையை ஏற்று ஒட்டர் தின்னை கிராமத்திலேயே புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறக்க  முதல்வர் உத்ரவிட்டதையடுத்து,  மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ஓகேனக்கல்லில் இருந்து காணொலி காட்சி மூலம் ஒட்டர் தின்னையில் உள்ள பகுதி நேர நியாய விலைக்கடையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஒட்டர் தின்னையில் உள்ள நியாய விலைக்கடை தொடக்க விழா பஞ்சப்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி அன்பழகன் தலைமையில் நடந்தது.


நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி,  பஞ்சப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் முருகன் ஆகியோர்  முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பஞ்சப்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் பி.கே.அன்பழகன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மாரப்பன், வார்டு உறுப்பிணர்கள், திமுக கிளை செயலாளர் தர்மன். முன்னாள் துணை செயலாளர் சாதனா, திமுக நிர்வாகிகள் சோமு, சிவக்குமார், திம்மப்பன், செந்தில்குமார்,  ஊர் கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad