கர்நாடகா கேரளா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அதி தீவிரமாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் ஹேமாவதி ஆரங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது கர்நாடக அரசு.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரண்டு அணைகளில் இருந்தும் அதிகபடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. நேற்று மாலை நேரத்தில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டன. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த உபரி நீரானது 210 கிலோமீட்டர் தூரம் கடந்து வந்து தமிழக எல்லை பகுதிக்குள் பிலிகுண்டுலுவிற்கு படிப்படியாக அதிகரித்து வர தொடங்கியுள்ளது.
குறிப்பாக கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் காவிரி கரையோர பகுதியில் உள்ள ஊட்டமலை, ஒகேனக்கல், சத்திரம், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தங்கும் விடுதிகளை ஆற்று வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் நுழைந்தன.
இங்குள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு வருகிற இந்த நிலையில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு வாசிகளை தனியார் மண்டபம் பள்ளிக்கூடம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது வீடுகளுக்குள் தண்ணீர் நுழைந்ததால் இங்கு உள்ள மக்கள் தங்களின் வீட்டு உபயோக பொருட்களை பாதுகாக்கும் வகையில் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகளை காலி செய்து வருகின்றனர். ஒரு சிலர் குடியிருப்புகளை காலி செய்யாமல் இருப்பதால் தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்குள் நுழைந்து அங்கு வசிக்கும் மக்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை வீட்டை விட்டு அப்புறப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக