தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேல்தெருவில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 5ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், புதன்கிழமை கங்கா பூஜை, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆடு, கோழி, பலியிட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து திருவிழாவின் கடைசி நாளான இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஶ்ரீமகாசக்தி மாரியம்மன் திருவீதி உலா மேல்தெரு, காவல்நிலையம், ஸ்துபி மைதானம், பேருந்து நிலையம் கடைவீதி உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதி வழியாக வானவேடிக்கை, நையாண்டி, பம்பை, மேளதாளங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து அம்மனை வழிப்பட்டனர்.
இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக