தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியில் மேலாண்மைகுழு 2024-2026 ஆம் ஆண்டுக்கான மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் அருள்நாதன் வரவேற்புரை ஆற்றினார், சிறப்பு அழைப்பாளராக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ராஜூ தலைமை தாங்கினார், இக்கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க பள்ளி மேலாண்மை குழு, மறு கட்டமைக்கப்பட்டு புதிய உறுப்பிணர்கள் தேர்வு வரும் 17.8.2024 தேதி பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
அதில் புதியதாக பள்ளி மேலாண்மைகுழு தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது சமயம் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொண்டு பங்கு பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பள்ளியின் உதவி ஆசிரியர்கள் கெளரிசங்கரி, சந்தனா மற்றும் உதவி ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக