இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட தடகள வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ, விளையாட்டில் ஒரு வருட டிப்ளமோ பட்டம் அல்லது ஆறுவார கால பயிற்சி முடித்தவராகவோ இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப்பிரிவு அலுவலகத்தில் இலவசமாக 06.08.2024 முதல் 12.08.2024 வரை மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது நேரிலோ 19.08.2024 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன்,பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த முன்னாள் தடகள விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக