மெனசி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 ஆகஸ்ட், 2024

மெனசி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு.


பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நாள்தோறும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு குறித்தும், அரசு நிர்ணயித்து பட்டியலிட்டுள்ளதன் படி நாள்தோறும் உணவு வழங்கப்படுகின்றதா என்பதையும், மாணவர்களுக்கு விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்து, விடுதிமாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்கு இவ்விடுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரிசி, பருப்பு, மளிகைப் பெருட்கள், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விவரம் குறித்தும், இருப்பு குறித்தும் அதற்கான பதிவேடுகளை ஆய்வு செய்து மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கிலம் புத்தகங்களை வழங்கி வாசிக்க செய்து கற்றல் திறனை ஆய்வு செய்து, மாணவர்கள் அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று படிக்க வேண்டும் எனவும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளுக்கு சென்று படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad