தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கல்கூட பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையின் மேல் தரைதளம் பழுதாகி மழை நேரங்களின் தண்ணீர் கசிந்து கட்டிடத்திற்க்குள் வழிகிறது, மேலும் கதவு, ஜன்னல் உள்ளிட்டவை உடைந்து கட்டிடம் இடிந்து விழும் நிலையில் மிகவும் பழுதாகி அபாயகரமான நிலையில் உள்ளது.
மேலும் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் கொட்டகையும் பழுதான நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பாலக்கோடு அரசு கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக