பாலக்கோட்டில் அரிமா சங்கம் சார்பில் இயற்கை உணவு மற்றும் மரபுசந்தை குறித்து விழிப்புணர்வு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

பாலக்கோட்டில் அரிமா சங்கம் சார்பில் இயற்கை உணவு மற்றும் மரபுசந்தை குறித்து விழிப்புணர்வு முகாம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் இயற்கை உணவு மற்றும் மரபுசந்தை குறித்து விழிப்புணர்வு முகாம் அரிமா சங்க தலைவர் கேசவராஜ் தலைமையில் நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு அரிமா சங்க நிர்வாகிகள் முத்து, கோவிந்தசாமி, பச்சியப்பன், நாகராஜ், சீனிவாசன், பாலாஜி, சக்திவேல், ராமசாமி, ராஜாமணி, கிரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை இயற்கை உணவு மற்றும் மரபணு சந்தை சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பேசுகையில் நஞ்சில்லா உணவே உடல் ஆரோக்கியத்திற்க்கு முதன்மையாகும், எனவே இரசாயனம் கலந்த உணவை தவிர்த்து இயற்கை சார்ந்த உணவை உட்கொள்ள வேண்டும். சிறுதாணிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை உள்ளிட்டவைகளை தினமும் உட்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து நவதான்ய கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad