இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருவதால் பரிசல் இயக்க அனுமதி வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பரிசல் துறை, மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதனை சரி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
சின்னாறு பரிசல் துறையிலிருந்து மணல் திருட்டு வரை பரிசலில் சென்று நீர்த்தேக்க பகுதியில் பரிசல் இயக்க முடியுமா என்பதையும் ஆய்வு செய்தனர். மேலும் வெள்ள பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்களையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வில் சுற்றுலா பயணிகளை பரிசலில் ஏற்றி செல்லும் பரிசல் ஓட்டிகளுக்கு மக்களின் நலன் கருதி பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.
இந்த ஆய்வு முடிந்த பின்பே பரிசல் ஓட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் நாளை பரிசல் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக