தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம், மெணசி கிராமத்தில் உள்ள நூலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையும்வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து விவசாயிகளுக்கு மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் 29.08.2024 அன்று நடத்தப்பட்டது. மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2024-2025, நாள்:20.02.2024-ல் விவசாயிகளுக்கு மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் தமிழ்நாடு பாசன மேலான்மை நவீனமைமாக்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மெனசி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மழைநீர் சேகரிப்பு குறித்த முறைகள், தடுப்பணைகள் அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல் மற்றும் கோடைஉழவு குறித்தும், பயிர்களுக்கு ஏற்ப நீர் உபயோகம் மற்றும் பயிர் விளைச்சல் உற்பத்தி குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இம்முகாமில் மெனசி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இம்முகாமில் வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் (வே.பொ.) திரு.ப.அறிவழகன், உதவிப் செயற்பொறியாளர் (வே.பொ) (அரூர்) திருமதி.ச.நிர்மலதா, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் திரு. சிவக்குமார், உதவிப் பொறியாளர்கள் திரு.அ. சதாம்உசேன், திருமதி.ச.அனுசாபேகம், அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக