அதன் ஒரு பகுதியாக கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.காளியப்பன் அவர்கள் மூலம் பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உதவி ஆய்வாளர் திரு.முருகன், கிரேடு 1 காவலர்கள் சின்னசாமி மற்றும் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கம்பைநல்லூர் முதல் நிலை பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள மளிகை கடை இயங்க தடை விதித்து கடையை மூடி, உடனடி அபராதம் தலா ரூபாய்.25000 விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 15 தினங்களுக்கு கடை திறக்கக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சியர், அவர்களுக்கு பெறப்பட்ட புகார் மற்றும் உணவு பாதுகாப்பு மாநில புகார் எண்ணில் வாட்ஸ் அப் எண் புகார் அடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பெயரில் திப்பம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆய்வு செய்து அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் காட்சிப்படுத்தியும், பொட்டலம் இடப்பட்ட எண்ணெய் பலகாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
ஒரு பேக்கரியில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் சுமார் 2 லிட்டர் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி இரண்டு பேக்கரிகளுக்கும் தலா ரூபாய்.1000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவகங்கள் மற்றும் சில்லி சிக்கன் கடைகளில் சுகாதாரம் மற்றும் இறைச்சி உள்ளிட்ட மூலப் பொருள்கள் தரம் கண்காணிக்கப்பட்டது. ஒரு துரித உணவு கடையில் செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி மேற்படி கடை உரிமையாளர்க்கும் நியமன அலுவலர் உத்தரவின் பெயரில் உடனடி அபராதம் ரூ.1000 விதிக்கப்பட்டது. ஒரு உணவகத்தில் இருந்து வறுத்த சிக்கன் இறைச்சி பகுப்பாய்வுக்கும் அனுப்பப்பட்டது.
ஒரு முறை பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய் RUCO) டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்று கொள்ள தொடர்பு கொள்ள அலைபேசி எண் அளித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக