ஏரியூர் அருகே செல்ல முடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 365 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் அவர்களின் பிறந்தநாள் தோறும் ஆசிரியர்கள் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வுகளை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்வை பள்ளியின் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கா. சரவணன் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா வே வாசுதேவன் தலைமையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை வெள்ளிக்கிழமை நடவு செய்தனர். மாணவர்களின் பிறந்தநாள் தோறும் வளாகத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு ஆசிரியர்கள் உரம் இயற்கை தலை உரம் மாட்டுச்சாணம் ஆட்டுச் சாணம் மண்புழு உள்ளிட்டவைகளுடன் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிகழ்விற்கான முயற்சியினை மேற்கொண்டு வரும் பள்ளியின் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக