சிட்லிங் கிராம நிர்வாக அலுவலர் பணிநீக்கம்; அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன்ராஜசேகர் உத்தரவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

சிட்லிங் கிராம நிர்வாக அலுவலர் பணிநீக்கம்; அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன்ராஜசேகர் உத்தரவு.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலை உள்வட்டம் சிட்லிங் கிராம நிர்வாக அலுவலராக ராஜேந்தர் என்பவர் பணியாற்றி வந்தார் இவர் கடந்த ஒரு வாரமாக உயர் அலுவலர்களுக்கு தனது பணி குறித்த தகவல் அளிக்கவில்லை மேலும் கணக்குகளை முடித்து வருவாய் கோட்டாட்சியர் ஒப்புதலுக்கு வைக்கவில்லை ஜபாமந்தியில்  பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் கோட்டப்பட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலந்து கொள்ளாமல் தனது செல்போனை தொடர்ந்து ஆப் செய்து வைத்துள்ளார் பொதுமக்களுக்கும் நிர்வாகத்திற்கும் இவரது செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் இவரை பணிநீக்கம் செய்து அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad