பாலக்கோடு மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை வகுப்பு‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 ஆகஸ்ட், 2024

பாலக்கோடு மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை வகுப்பு‌.


தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டி ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் மகளிர் வேதியியல் துறை சார்பாக ஆறு நாட்கள் பயிற்ச்சி பட்டறை நடைப்பெற்றது.


இதில் தினசரி வீட்டு உபயோகப் பொருட்களான கிருமி நாசினி, சலவை பொருட்கள், சோப்பு, பாத்திரம் கலுவும் திரவம் மற்றும் சாப்டனர் தயாரிக்கும் முறையை வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் சிவக்குமார் அவர்கள் விளக்கினார். இந்நிகழ்வை கல்லூரியின் தாளாளர் கோவிந்தராஜி அவர்கள் தலைமை உரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ரகுநாதன் வாழ்த்துரை வழங்கினார். துனை முதல்வர் முனைவர் முருகேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக துறைத்தலைவர் தங்கபாலு நன்றிவுரை தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மாணவிகளும் மேற்க்கண்ட தயாரித்த பொருட்கள் அனைத்தும் அவர்களே தயார் செய்து உபயோகத்திற்க்கு எடுத்துச் சென்றனர். இந்தப் பயிர்ச்சி பட்டறை எதிர் காலத்தில் சுயமாக தொழில் தொடங்கும் அளவிற்க்கு பயிற்ச்சி பெற்றதாக கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad