அரூர் அருகே சித்தேரியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

அரூர் அருகே சித்தேரியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சியில் 62 குக்கிராமங்கள் உள்ளன. இந்த சித்தேரி கிராமத்தில் பள்ளி கல்லூரி மாணவிகள் பேருந்து ஏறும் இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால்  வேலைக்கு செல்லும் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் மதுபாட்டில்களை வாங்கி  குடித்து விட்டு மேலும் குடிக்க பணம் கேட்டு வீட்டில்உள்ள பெண்களை துன்புறுத்தி வருவதாகவும் பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் வழியில் உள்ளதாகவும்  மது வாங்க  வரும் வாலிபர்கள் மதுவை அருந்திவிட்டு வாகனங்களை வேகமாக ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்பும் ஏற்படுவதாகவும், ஆகையால் தங்கள் பகுதியில் உள்ள மதுபானக்கடையை மூடக்கோரி சித்தேரி குண்டல்மடுவு நொச்சிக்குட்டை தோல்தூக்கி மண்ணூர் சூர்யக்கடை உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் உள்ளிட்டோர் மதுபானக்கடையின் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் அறிந்து  சென்ற, அரூர் வருவாய் கோட்டாச்சியர்  வில்சன் ராஜசேகர்,மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் டாஸ்மாக் தாசில்தார் சரவணன்  ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தைக்கு  பின்னர் சாலை ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


இதில் கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர்  சரவணன் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் கிராம நிர்வாக அலுவலர் தினகரன் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad