தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் 60 இவர் பாப்பாரப்பட்டி கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது எண்டப்பட்டி சாலை பிரிவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தினார் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்த காயங்களுடன் இருந்துள்ளார் எதிரே வந்து மோதியவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் தகவல் அறிந்த வந்த போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக