அமானிமல்லாபுரம் கிராமத்தில் குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் மாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

அமானிமல்லாபுரம் கிராமத்தில் குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் மாயம்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த அமானி மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது. 29) இவர் பெங்களுரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீமாத்தி (வயது. 25) இவர்களுக்கு இரண்டரை வயதில் அருண் என்ற ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக  கனவன் - மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி விடியற்காலை 5 மணிக்கு யாரிடமும் சொல்லாமல் தனது குழந்தையுடன் சீமாத்தி  மாயமானார். மனைவி குழந்தை இருவரையும் காணாதாதல் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.


ஆனால் இதுவரை இருவரும் கிடைத்காததால் வினோத்குமார் மனைவியையும், குழந்தையையும் கண்டுபிடித்து தரக்கோரி மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad