தமிழ்நாடு பழங்குடியினர் மாநில தலைமைச் சங்க தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று அரூர் வட்டம் தீர்த்தமலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பழங்குடியினர் மாநில தலைமைச் சங்க மாநில தலைவர் திரு.C.பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் L.ராஜி மற்றும் மாநில துனை செயலாளர் V.A.ஆண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட தலைவராக அ.தீர்த்தகிரி அவர்களும் மாவட்ட பொதுச்செயலாளராக முல்லை வேந்தன் மாவட்ட பொருளாளராக திருமதி.ராஜேஷ்வரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில இளைஞரணி தலைவர் ஜெய முருகன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக