தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த விவசாயி மணி (வயது.45) இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர், இவரது மூத்த மகள் தெய்வானை (வயது.17) என்பவர் கடந்த ஆண்டு +2 முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அனைவரும் உறங்க சென்றனர். நேற்று காலை கண்விழித்தபோது தெய்வானை காணவில்லை, பதற்றமான குடும்பத்தினர்.
நண்பர்கள் உறவிணர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தரக்கோரி மணி பாலக்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக