கேரளா வையநாடு நிவாரண உதவி பொருட்களை தருமபுரி ஆட்சியர் மூலம் கொண்டு சென்ற மை தருமபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

கேரளா வையநாடு நிவாரண உதவி பொருட்களை தருமபுரி ஆட்சியர் மூலம் கொண்டு சென்ற மை தருமபுரி அமைப்பினர்.


மை தருமபுரி அமைப்பின் மூலம் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை தருமபுரி மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இயற்கை சீற்ற பேரிடர் காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து முதல் அமைப்பாக சென்று உதவிகளை பல்வேறு மாவட்டங்களில் செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு கேரளா வெள்ள நிவாரண உதவி, 2021, 2023 சென்னை வெள்ள நிவாரண உதவி, 2018 வேதாரண்யம் புயல் உதவி, 2023 தூத்துக்குடி வெள்ள நிவாரண உதவி போன்ற உதவிகளை தொடர்ந்து தற்போது கேரளா மாநிலம் வையநாடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் நிவாரண உதவிகளை கொண்டு செல்கின்றனர். 

அங்குள்ள மக்களுக்கு தேவையான அரிசி எண்ணெய், பிஸ்கட், நாப்கின்ஸ், குடிதண்ணீர், அரிசி, மருந்துகள் மற்றும் 500 குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் என ஏழு லட்சத்திற்கு நிவாரண உதவி பொருட்களை கொண்டு செல்கின்றனர். நிவாரண உதவி பொருட்களுக்கு உதவிய அமீரகம் ஹோப் அமைப்பு, ஹைட் டியான் அமைப்பு, டோக்கியோ தமிழ்ச்சங்கம், தருமபுரி மாவட்ட தொழிலதிபர்கள், பொதுமக்கள்கள் ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தருமபுரி ஆட்சியர் திருமதி கி.சாந்தி.,இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சி ராஜ்குமார் ஆகியோர் மூலம் வழியனுப்பி வைக்கப்பட்டனர். மை தருமபுரி அமைப்பின் கௌரவ தலைவர் CKM ரமேஷ், நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்ச்செல்வன், அமீரக ஹோப் பவுண்டேஷன் கௌசர் பேக், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், அருள்மணி, முகமத் ஜாபர், விஜயகாந்த், சண்முகம், கிருஷ்ணன், சபரிமுத்து, கௌதம் ராஜ்,  ஆகியோர் நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்ல உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad