ஏரியூர் அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி கால் முறிவு மருத்துவமனையில் அனுமதி.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

ஏரியூர் அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி கால் முறிவு மருத்துவமனையில் அனுமதி..


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தொன்னகுட்டஹள்ளி குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் செல்வகுமார் இவர் அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 4 ஏக்கரில் வாழை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.


இந்த நிலையில் அடிக்கடி ஒற்றை யானை ஒன்று அவரது விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது நேற்று இரவு ஒற்றை யானை வாழை தோட்டத்தை சேதப்படுத்திவிட்டு விவசாயி உறங்கிக் கொண்டிருந்த பொழுது விவசாயியை தாக்கியுள்ளது அருகிலுள்ள விவசாயிகள் இதனைக் கண்டு சத்தமிட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து விரட்டிச் சென்றனர். காயம் அடைந்த விவசாயியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யானை தாக்கியதில் விவசாயின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது . 

இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.உடனடியாக வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad