அரூர் அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

அரூர் அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்.


தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 


குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக தண்ணீர் வழங்கவில்லை என நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறையால் பள்ளி குழந்தைகள் வேலைக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள்  அரூர் தருமபுரி செல்லும் சாலையில் காலி குடங்களை வைத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தகவல் அறிந்து வந்த வட்டாச்சியர் வள்ளி கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரகள் மீனா கலைச்செல்வி மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சாலைமறியல் கைவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad