தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், பூதநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் வருகை குறித்த பதிவேடுகள், பிரசவ அறை, மருந்து இருப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீரென நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுத்தமாக பராமரித்திட வேண்டுமெனவும், இந்நிலையத்திற்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இம்மருத்துவமனைக்கு வருகை தரும் முதியோர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் அமரும் வகையில் நிழற்கூடம் அமைப்பது, குடிநீர் வசதி ஏற்படுத்துவது குறித்து குறித்து சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக