HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில வாய்ப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 ஆகஸ்ட், 2024

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில வாய்ப்பு.


தாட்கோ மூலம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு (B.Sc(Computing Designing) B.Com, BCA & BBA) சேர்ந்து படித்திட சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது HCL நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு HCL Technologies–ல் வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைகழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும்.


இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.


இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000/- முதல் ரூ.2,20,000/- வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். மேற்கண்ட திட்டத்தில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

Post Top Ad