மை தருமபுரி அமைப்பின் மூலம் பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சேவை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆதரவின்றி இறந்தவர்களுக்கு உறவாய் இருந்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துள்ளார்.
இவரது உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பச்சியம்மன் மயானத்தில், தருமபுரி இருப்புப்பாதை முதல் நிலை காவலர் வீரவேல், மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, செந்தில், ஜெய் சூர்யா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 108 ஆதரவற்ற புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் மை தருமபுரி அமைப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக