மை தருமபுரி அமைப்பின் பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூலம் 1251 நாளில் 1000 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 செப்டம்பர், 2024

மை தருமபுரி அமைப்பின் பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூலம் 1251 நாளில் 1000 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் தினந்தோறும் செய்து வருகின்றனர். பசித்தோருக்கான உணவு சேவை, ஆதரவற்றவர்களுக்கு உறவாய் இருந்து இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் பணி, இது போன்று பல சேவைகளை செய்து வருகின்றனர். 


கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவமனை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கி வரும் திட்டம் 1251 ஆவது நாளில் மை தருமபுரியின் உணவு சேவை திட்ட மூலம் ஆயிரம் நபர்களுக்கு மாலை உணவு வழங்கப்பட்டது. மை  தருமபுரி சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருள்மணி, கிருஷ்ணன், மூர்த்தி, முகுந்த் ராஜா, பனிமலர், பிரேமா, நித்யா ஆகியோர் மக்களை ஒழுங்கு படுத்தி உணவு வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad