பாப்பிரெட்டிப்பட்டி நரசுஸ் காபி திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மாவட்ட பகுத்தறிவாளர்கள் துணைத் தலைவர் பெ. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி தொடங்கி வைத்தார்.
மாவட்ட திராவிடக் கழக தலைவர் கு. தங்கராஜ், காப்பாளர் தமிழ்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஜீவிதா, மொரப்பூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் அறிவுமணி, ஒன்றிய அமைப்பாளர் மு, சிலம்பரசன், பாளையம்பசுபதி ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்தினார். மாநில தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார்.
பெரியார் ஒரு கேள்விக்குறி, என்றும் தேவை பெரியார், பெரியார் காண விரும்பிய சமுதாயம், புரட்சியாளர் பெரியார், பெரியாரால் வாழ்கிறோம், பெரியார் பிறவாமல் இருந்திருந்தால், போன்ற தலைப்புகளில் 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டு பேச்சு போட்டியில் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது போட்டியில் முத்தமிழரசன் முதல் பரிசு (ரூபாய் 3000) கோ.இனிய கவி, இரண்டாம் பரிசு (ரூபாய்.2000) சுபலட்சுமி (ரூபாய் 1000) பெற்றனர் அவர்களுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந்திரன், டாக்டர் பழனிசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக