பாறைக்கொட்டாய் கிராமத்தில் 16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 செப்டம்பர், 2024

பாறைக்கொட்டாய் கிராமத்தில் 16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.


தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த பாறைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயின் 16 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.


கடந்த மாதம் 30 ம் தேதி மாலை கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, விசாரித்ததில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் சிறுமியை கடத்தியதாக தெரிய வந்தது.


இது குறித்து சிறுமியின் தந்தை பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த போலீசார் நேற்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்திய  வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad