ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 செப்டம்பர், 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைவு.


நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அருவி மற்றும் ஆற்றுப் பகுதியில் குளிக்க தொடர்ந்து இரண்டாவது நாளாக தடையானது நீடித்து வருகிறது.


கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபநிநீராலும் காவேரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்த வண்ணம் இருந்தது இந்த நிலையில் நேற்று முன்தினம் 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று நிலவரப்படி 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் தடை விதித்திருந்தது இந்த நிலையில் இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து.


இன்று காலை ஆறு மணி நிலவரப்படி 18 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது இந்த நீர்வரத்து குறைந்த அதன் காரணமாக சின்னாறு கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது குளிப்பதற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக தடையானது நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad