பாப்பாரப்பட்டியில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 செப்டம்பர், 2024

பாப்பாரப்பட்டியில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டியில் தேமுதிக சார்பில் மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் 72 வந்து பிறந்தநாள் விழா, கட்சியின் 20ம் ஆண்டு விழா, பத்ம பூஷன் விருது விழா ஆகிய முப்பெரும் விழா மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமையில் நடைபெற்றது. 


முதலில் ஆடல் பாடல் நிகழ்ச்சி உடன் துவங்கியது. இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ் நகரச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.  மாநில கழக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் திருப்பதி, தலைமை கழக பேச்சாளர் தமிழ் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். 


இளங்கோவன் பேசுகையில் நாடெங்கும் கஞ்சா புழக்கம் மற்றும் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே உன் கண்களுக்கு தெரியவில்லையா ஸ்டாலின் அவர்களே தமிழக மக்களை காப்பாற்றுங்கள் என்ன பேசினார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட அவைத் தலைவர் உதயகுமார், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குமார் தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் இறுதியில் வடக்கு ஒன்றிய பொருளாளர் முரளிதரன் நன்றி உரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad