இதன் காரணமாகவும் காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 22,000 கன அடியாகவும் அதிகரித்தது இந்நிலையில் இன்று காலை தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று முதல் தடை விதித்துள்ளது.
மேலும் நீர்வரத்து அதிகரித்துடன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக